கர்ப்பகால தவறுகள்!

 கர்ப்பகால தவறுகள்!

உணவு முறை

ஆச்சரியம் ! நீங்கள் உண்மையில் ஆறு முறை அல்லது ஏழு முறை கொஞ்சமாக ஆரோக்கியமான உணவை நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் (அதாவது ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு இடையில் சாப்பிட வேண்டும்). "அடிக்கடி மற்றும் பல்வேறான உணவுக் குழுக்களில் இருந்து சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரையை நிலையான வரம்பில் வைத்திருக்கும். அத்துடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக அமையும்" என்கிறார்கள் வைத்தியர்கள். இப்போது உணவு உண்ணும் நேரம் இல்லை, என உங்கள் உணவுமுறையை மாற்ற அதிகம் கவனம் செலுத்த வேண்டாம். கர்ப்பத்திற்கு முன் எவ் வகையான உணவுகள் உங்களுக்கு நன்றாக இருந்ததோ அவ் உணவுகள் கர்ப்பகாலத்திலும் உங்களுக்கு நல்லது. அவையாவன மரக்கறி  மற்றும் பழ வகைகள்( வாழைப்பழம், மாம்பழம், தார்பூசணி,தக்காளி, கீரை ...) இவற்றுடன் பால், இறைச்சி,பாதம் சிவப்பரிசி போன்றவற்றை உங்கள் உணவு வேலையில் இணைத்துகொள்வது சிறப்பாகும்.

மது அருந்துதல்

நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது  ஒரு தனிப்பட்ட முடிவாகும், ஆனால் பல ஆய்வுகள் கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் கருவில் ஆல்கஹோலின்   கோளாறுகள் (FASDs) அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதை அறிவீர்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மற்றும் அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் (ACOG) ஆகிய இரண்டும் கர்ப்பிணிப் பெண் கர்ப்ப காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றன. "கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் தொடர்புடைய பிறப்பு குறைபாடுகள் முற்றிலும் தடுக்கக்கூடியவை" என்று ACOG தெரிவிக்கிறது. "அனைத்து சுகாதார வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள், கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான மது அருந்துதல் என்ற ஒரு முறை இல்லை என்பதை கர்ப்பிணிக்கு தெளிவுபடுத்துவது அவசியம்."

காபி/ தேனீர்

காஃபின் ஒரு நஞ்சுபொருள்  என்து உண்மைதான், அதாவது நீங்கள் காஃபின்னை அதிகளவு நுகரும் போது, நீங்களும் உங்கள் கருவும்  ஒரு சலசலப்பை உணர்வீர்கள். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவு காபி அல்லது தேநீர்குடிப்பது  மிகவும் நல்லது., ACOGன் கூற்றின் படி, ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் வரை காஃபின் உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அதனால் எவ்வளவு காபி அல்லது தேநீர் உங்களுக்கு குடிக்கலாம்?  என்பதை தீர்மானிக்கிறது, பானத்தின் வகை மற்றும் அதன் காஃபின் உள்ளடக்கம் என்பவற்றை பொறுத்தது.​உதாரணமாக, பாலுடன் கலந்த அமெரிக்க காபியின் பலவீனமான கோப்பையை விட கருப்பு நிறத்தில் பரிமாறப்படும் பிரஞ்சு கலவையானது மிகவும் 70 சதவீதம் வலிமையானது. சாய நிற (சிவப்பு), பச்சை தேநீர்களில் காஃபின் அளவு மிக குறைவாக காணப்படுகிறது

புரத உணவுகள்

கர்ப்பிணி பெண்களே !  நீங்கள் அனைத்து பாலாடைக் கட்டிகளையும் (Cheese)தவிர்க்க வேண்டியதில்லை. வன்மையான மற்றும் பழுப்பு நிற  பாலாடைக் கட்டி வகைகள் சாப்பிடலாம், இவை வெப்பமுறையில் செய்யப்பட்டதால் முற்றிலும் நன்றாக இருக்கும். மென்மையான, வெப்பசெயன்முறைக்கு உட்பட்டு செய்யப்படாத பாலாடைக் கட்டி வகைகளை தவிர்ப்பது நல்லது . இவை உணவினால் பரவும் நோய்களைக் கொண்டிருக்கலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், உங்கள் மளிகைக் கடையில் வெப்பமுறையில் செய்யப்பட்ட பதிப்புகள் இருக்கும் .பொருளின்செயன்முறை பட்டியலை பார்த்து அறியலாம்.  நீங்கள் சரியான சீஸைகொள்வனவுசெய்தால்,  உங்கள் திண்பண்டங்ளை சீஸ் உடன் அனுபவிக்க முடியும்.

உடல் எடை

ஆமாம், கர்ப்பகாலத்தில் உணவு பசி உண்மையானது. இரவு உணவின் பிறகு இரண்டாவது முறை உணவு எடுக்கவேண்டி ய சந்தர்ப்பம்  வருவதற்கு நிச்சயமாக சற்று அதிக வாய்ப்பு உள்ளது, ஆனால் சராசரியாக கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 300 கூடுதல் கலோரிகள் மட்டுமே தேவை. உங்கள் உடலை நன்கு ஊட்டச்சத்துடன் வைத்திருப்பது முக்கியம் என்றாலும், ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு  உங்கன் உடல் கடினமாக உழைக்கிறது!- ACOG யின் கூற்றின்படி, நீங்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தினை பெற உங்கள் எடையை 08 முதல் 13 கிலோ வரை அதிகரிக்க வேண்டும்.

உணவுகட்டுப்பாடுகள்

கர்ப்ப காலத்தில் கடல் உணவு உண்பது மிகவும் ஆரோக்கியமானது! மீனில் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன, அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் அனைத்து மீன்களும் சமமான சத்துக்களைகொண்டவை அல்ல. FDA ஒவ்வொரு வாரமும் குறைந்த பாதரசம் கொண்ட கடல் உணவுகளை இரண்டு முதல் மூன்று முறையேனும் உண்ணுவதற்கு தாய்மார்களை ஊக்குவிக்கிறது, குறிப்பாக, சால்மன், இறால் மற்றும் திலாபியா போன்ற கடல் உணவுகளின் பக்கம் செல்லுங்கள். துரதிர்ஷ்டவசமாக, வாள்மீன்கள், முண்டகண் டுனா, சூரை, மல்லன் , சீலா மற்றும் சுறா ஆகியவை அதிக அளவு பாதரசத்தைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். FDA ப் பொறுத்தவரை, கர்ப்பிணிப் பெண்களை சமைக்காத உணவுளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறது: பச்சை மீனில் ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கலாம், அவை நோய்த்தொற்றுகள் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும், எனவே சமைத்த உணவுகளை  உட்கொள்வதே உங்களுக்கும் கருவிற்கும் சிறந்தது.

மாத்திரை தவறுகள்

பல மருந்துகள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாக இருக்கலாம், ஆனால் எப்படியாவது பெண்கள் ஒற்றைத் தலைவலியை பொறுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டும் என நம்புகிறார்கள். அப்படி இல்லை. நீங்கள் எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ்வரை கலந்தாலோசிக்க வேண்டும், ஆனால் பல நிபுணர்கள் பின்வரும் வலிகளுக்கு மருந்து பெறுவதற்கு பச்சை விளக்கு கொடுக்கிறார்கள்: தலைவலி மற்றும் காய்ச்சலுக்கான ,நெஞ்செரிச்சல் அத்துடன் ஒவ்வாமைக்கான மாத்திரைகள் என்பனவற்றுடன் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும் கர்ப்ப காலத்தில் தொடரலாம், ஆனால் மீண்டும், உங்கள் மருத்துவரின் உத்தரவுகளைப் பின்பற்றவும். மூலிகை மருந்துகள் மற்றும் தேநீர் என்பன கருவிற்கு விளைவுகளை ஏற்படுத்துவது குறித்து அதிக ஆராய்ச்சி செய்யப்படவில்லை. மளிகைக் கடையில் நீங்கள் வாங்கும் வகைகள் பாதுகாப்பாக இருக்கலாம், ஆனால் முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இயற்கையான பாதையில் யோக மற்றும்  தியானம் செய்யுங்கள் இது உங்களுக்கு அமைதியை தரும் அல்லது சாக்லேட் சாப்பிடுங்கள்

பயிற்சி தவறுகள்

உண்மையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மிதமான உடற்பயிற்சிகள் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், குழந்தையின் வருகைக்கு உங்கள் உடலைத் தயார்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செயல்பாட்டைப் பெற வேண்டும் என்று ACOG பரிந்துரைக்கிறது - "மிதமானது" என்றால் உங்கள் இதயத் துடிப்பு சீராக அதிகரித்து உங்களுக்கு வியர்க்கத் தொடங்குகும் வரையாகும் , இந்நிலையில் நீங்கள் சாதாரணமாகப் பேசவேண்டும் அதிக மூச்சு விட்டு கதைப்பதற்கு சிரமமாகும் நிலைக்குசெல்வதை தவிர்க்கவும். உங்கள் முதுகில் படுத்துக் கொண்டு செய்யப்படும் பயிற்சிகளை, விளையாட்டுளை ​தவிர்க்கவும் (இது உங்கள் மூளை மற்றும் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது). கர்ப்பத்திற்கு பாதுகாப்பான உடற்பயிற்சிகளைப் பற்றி உங்கள் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ்வரிடம் பேசுங்கள், உங்கள் வழக்கத்தில் இலேசான பயிற்சிகளை இணைத்துக்கொள்ளலாம்

கூந்தல் பரமரிப்பு தவறுகள்

கர்ப்பகாலத்தில் உங்கள் தோற்றத்தை மெருகூட்டம் செய்ய வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டும். உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசுவதில் ஒரு சில ஆபத்து இருந்தாலும் அதாவது இரசாயனங்கள் உச்சந்தலையில் உறிஞ்சப்படுவதால் ஏற்படும் ஆபத்துக்கள், இது தொடர்பாக ஆய்வுகள் உறுதியான எதையும் காட்டவில்லை.குழந்தையின் உறுப்புகள் உருவாகும் போது,அதாவது குறைந்தபட்சம் முதல் மூன்று மாதங்களில் கூந்தல் சாயத்தைத் தவிர்க்க நிபுனர்கள் பரிந்துரைக்கிறார்கள். நிரந்தரமான சாய தயாரிப்புக்கு பயன்படும் தக்காளி சாறு,  அதேபோன்று இயற்கையான காய்கறி நிற சாயத்தைத் தேர்வுசெய்ய பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் சிகையலங்கார நிலையத்திலோ அல்லது வீட்டிலோ இருந்தாலும், அந்த இடம் நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அழகு குறிப்பு தவறுகள்

நீங்கள் ஒரு அம்மாவாக இருக்க வேண்டும் என்பதற்காக வாராந்திரகை விரல் நக அலங்காரங்ளை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நக பூச்சியில் காணப்படும் இரசாயணங்கள் உங்களால் உடகொள்ளப்பட்டால் அவை உங்கள் கருவை பாதிப்படைய வைக்கலாம் என கூறப்படுகிறது.ஆனால் சில இரசாயணங்கள் இவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை என ஆராய்ச்சிகள் வெளிபடுத்துகின்றன. இரசாயண கலந்த புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க, நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களைத் தேர்வுசெய்யது உங்கள் பணிளை தொடருங்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தம் பல விதம்

கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள்