கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள்

கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள்

ஒரு குடும்பத்தைத் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளீர்களா? அவ்வாறாயின், நீங்கள் சில உடலுறவு முறைளை அறிந்துகொள்வது குடும்பத்தை விரிவுபடுத்த உதவியாக இருக்கும்.குழந்தை பெற்றுக்கொள்ள கருத்தரிப்பதற்கான தவறான செக்ஸ் நிலைகள் எதுவும் இல்லை , ஆனால் விந்தணுக்கள் முட்டையை சந்திக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் சில செக்ஸ் நிலைகள் இருக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கான ஒவ்வொரு சிறந்த செக்ஸ் நிலைக்கும் பின்னால் உள்ள விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் மிகக் குறைவாக இருக்கலாம் அல்லது, உண்மையைச் சொன்னால், ஆதாரங்கள் இல்லாமலும் இருக்கலாம். இயற்பியல் உங்கள் பக்கத்தில் உள்ளது, எனவே அவர்களுக்கு ஏன் ஒரு சூழல் கொடுக்கக்கூடாது? ஒரு குழந்தையை பெற பின்வரும் செக்ஸ் நிலைகளை முயற்சித்து பார்க்கலாம். இதனால் உங்களுக்கு இழப்பேதும் இல்லையே!

செக்ஸ் நிலைகளின் முக்கியத்துவம் தெரியுமா?

எந்த செக்ஸ் நிலையும் கருத்தரிப்புக்கு உத்தரவாதம் அளிக்காது என்றாலும், மிஷனரி போன்ற புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் செக்ஸ் நிலைகளைக் கருத்தில் கொள்ளுமாறு நோயாளிகளிடம் நான் கூறுகிறேன்," என Nita Landry, MD, ob-gyn and cohost of the syndicated talk showல் கூறுகிறார். "ஆனால் நீங்கள் செக்ஸில் முயற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்பு ஆரோக்கிய நிலையில் இருப்பது மாத்திரம் முக்கியமில்லை." நீங்கள் நல்ல குழந்தை உருவாக்கும் நிலையில் உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த நீங்களும் உங்கள் துணையும் உங்கள் மருத்துவர்களைப் சந்தித்து ஆலோசணை பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்: அத்துடன் உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (BMI) ஆரோக்கியமான வரம்பில் உள்ளது, உங்கள் உணவில் போதுமான ஃபோலிக் அமிலத்தைப் பெறுகிறீர்கள் மற்றும் நீங்கள் மதுவை  பயன்படுதுவதில்லை என்பவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் மாதவிடாய் பட்டியலிலிருந்து மாதவிடாய் சுழற்சி சரிபார்ப்பை சரிபார்த்த பிறகு, கருமுட்டை வெளி​யாகும் காலெண்டரை வைத்து, கருமுட்டை விடுவிப்பு அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் எப்போது கருமுட்டை வெளியிடுகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வதுடன் முன்  தயாரிப்பில் ஈடுபட முடியும்.

குழந்தை பெற சிறந்த செக்ஸ் முறைகள்

சரி, இப்போது நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா? குழந்தையை கருத்தரிக்க சிறந்த செக்ஸ் நிலைகள் என்ன? இவை உண்மையான கருத்தாகுமா? இந்த முறைகளில் மந்திரம் அல்லது மூட நம்பிக்கைகள் எதுவும் இல்லை. இவ் நிலைகள் மூலம் விந்தணுக்களையும் கருமுட்டையையும் திறம்படப் ஒன்றுசேர்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பதாகும். அதற்கான  சிறந்த செக்ஸ் நிலை விருப்பங்கள் பின்வருவன.

நீங்கள் எந்த  செக்ஸ் நிலையில் முயற்சி செய்ய முடிவு செய்தாலும்,பெண்கள்! உங்கள் பெண் உறுப்பில் விந்தனுக்கள் சென்றதன் பின்னர் குறைந்தது 15 நிமிடங்கள் வரை நீங்கள் முயற்சிக்கும் நிலையிலே தாமதித்துக்  கொள்ளுங்கள். ஒரு பிரிட்டிஷ் மெடிக்கல்  ஆய்வில், கருப்பையில் விந்தனு செலுத்தப்பட்ட பிறகு 15 நிமிடங்கள் படுத்திருக்கும் பெண்களில் 27 சதவீதம் பெண்கள் கர்ப்பமாகிவிட்டனர், இந்த செயல்முறைக்குப் பிறகு உடனடியாக எழுந்த பெண்களில் 17 சதவீதம் கர்ப்பமாகினர். விந்தணு நேரடியாக கருப்பையில் செலுத்தப்படும் கருவுறுதல் சிகிச்சையைப் பெறும் பெண்களை இந்த ஆய்வு மையமாகக் கொண்டிருந்தாலும், சிறந்த பழங்கால உடலுறவு முறைகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். எனவே குழந்தையை கருத்தரிக்க பின்வரும் பாலின நிலைகளை முயற்சிக்கவும், அவற்றை உங்கள் துணைகளின் விருப்பத்திற்கு அமைய மாற்றிக்கொள்ளலாம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக துணையுடன் மகிழ்ச்சியாகவும் காதலாகவும் இருங்கள்.

Missionary செக்ஸ் முறை

மிஷனரி முயற்சியானது பெண்ணுக்கு மேல் ஆண் படுத்திருக்கும்(இருக்கும்) செக்ஸ் நிலையாகும். ,உண்மையாக இந்த செக்ஸ் நிலை சாத்தியம் அதிகமாகும், ஏன் எனில் பெண்ணுக்கு மேலே படுத்துயிருக்கிற ஆண் புவிஈர்ப்பு விசையை சாதகமாக வைக்கிறான், Landry கூறுகிறார். அதாவது, Missionary செக்ஸ் முறை குழந்தை கருத்தரிப்பதற்கு மிகவும் பிரபலமான செக்ஸ் நிலைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று நாங்கள் யூகிக்கிறோம்."பெண்கள் ஆணுக்கு மேல் படுத்தால் உச்ச நிலையில் விந்தணுக்கள் மேல்நோக்கி நீந்த வேண்டும், இது புவிஈர்ப்பு விசைக்கு எதிராக விந்தணுக்கள் நீந்தவேண்டும் என்பதாகும். ஆனால் பெண்ணுக்கு மேலே படுத்திருக்கும்  ஆண் விந்தணுவை பெண்ணின் யோனிக்குள் பாய புவிஈர்ப்பு விசை அனுமதிக்கிறது. அத்துடன் இந்த செக்ஸ் நிலையில் பெண்ணின் கருப்பை வாய் நோக்கி அதிகளவான விந்தனுக்கள் பாய கூடியதாக உள்ளது. Missionary செக்ஸ் நிலையின்  செயல்திறனை அதிகரிக்க, பெண்ணின் குண்டியின் அடிப்பகுதியில் ஒரு தலையணையை வைக்கவும், இது அதிகளவான விந்தணுவுக்கள் கருப்பைக்கு பாய இன்னும் சாதகமான நிலயை அளிக்கும்.

Doggie style செக்ஸ் முறை

இந்த செக்ஸ் நிலை "ஆழமாக ஆணுறுப்பு யோனினுள் செல்வதற்கு(ஊடுருவலை) அனுமதிக்கும். இந்த செக்ஸ்  நிலையும் விந்தணுவை முடிந்தவரை கருப்பை வாய்க்கு நெருக்கமாகப் பெற உதவுகிறது, மேலும் கருத்தரிப்பை இன்னும் சாத்தியமாக்குகிறது" என்று Landry கூறுகிறார். ஒரு பெண் இருகைகளிலும் முட்டங்கால்களிலும் அமர்ந்தபடி நாய் போன்று இருக்க.ஆண் பெண்ணின் குண்டியின் பின் பகுதியிலிருந்து ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்கும் முறை இந்த செக்ஸ் பாணியாகும், இந்த செக்ஸ் பாணி  அதிகளவான விந்தணுக்கள் கருப்பையை அடைய சாத்தியமாக்குகிறது.

 

 

Legs on shoulders செக்ஸ் முறை

பெண் தனது இரு கால்களையும் துணையின் தோள்களில்  இட்டு இருகால்களையும் ஒன்றோடு ஒன்று கொர்த்துகொள்ளும் நிலை. இந்த செக்ஸ் நிலை Missionary செக்ஸ் நிலையின்   ஒரு வடிவம் எனலாம், இந்த செக்ஸ் நிலையில் பெண் உடலுறவின் போது தன் துணையின் தோள்களில் கால்களை இணைத்துக்கொள்கிறாள், இந்த நிலை விந்தணுவை முடிந்தவரை கருப்பை வாயை நெருங்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் புவிஈர்ப்பு விசையின் நன்மையையும் கொண்டுள்ளது.

CAT (Coital Alignment Technique) செக்ஸ் முறை

Missionaryயால் உங்களுக்கு பதில் இல்லையா? விந்தணுவை கீழ்நோக்கி நீந்த அனுமதிக்கும் போது இந்த செக்ஸ் நிலை பெண்ணின் உச்சக்கட்டத்தை அடைவதற்கு மிகவும் தேவையானதாக  அமையும்.​ஆனால் இந்த செக்ஸ் நிலை கருத்தரிப்பில் கூடுதல் போனஸ் ஆகும். பெண் தன் முழங்கால்களை அகற்றி விரிக்கும் போது, அதனால் மேலிருக்கும் ஆணின் ஆணுறுப்பு பெண்ணின் கீழ் உடற்பகுதி (பெணுறுப்புடன்) இடையில் நன்றாக பொருந்துகிறது. ஆண் மாத்திரம் தள்ளுவதற்குப் பதிலாக, ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்கள் இடுப்பை ஒன்றாக  அசைக்கிறார்கள் இந்செக்ஸ் நிலை ஈர்ப்பு உதவியுடன் கருப்பை வாய்க்கு அதிகளவான விந்தணுக்ளை செலத்துவதற்கு உதவுகிறது.

Reverse cowgirl செக்ஸ் நிலை

ஐந்தில் ஒரு பெண்ணுக்கு முனையுடைய அல்லது பின்னோக்கிய கருப்பை காணப்படுகிறது. அவர்களில் ஒருபெண்ணாக நீங்களும் இருந்தால், இந்த செக்ஸ் நிலை கர்ப்பம் தரிக்க சிறந்த ​நிலையாக இருக்கலாம். இந்த செக்ஸ் நிலையில், பெண் தன் துணையின் மேல் தன் குண்டியின் அடிப்பகுதி ஆணின் வயிற்று பகுதியில் இருக்குமாறு அமர்ந்து ஆணுறுப்பை யோனியுள், நுழைவதற்கான தனித்துவமான சாய்வை வழங்குகிறது. உங்களுக்குப் பின்னோக்கிச் செல்லும் கருப்பை இருக்கிறதா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது, ஆதலால் இந்த செக்ஸ் நிலையை முயற்சி செய்யது, இன்பத்தை அனுபவியுங்கள்.

Wheelbarrow செக்ஸ் நிலை

 இதை செக்ஸ் நிலையை முயற்சிக்க நீங்கள் ஒரு யோகாசனம் அல்லது ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றில் ஈடுபடுபவராக இருக்க வேண்டியதில்லை, ஆனால் குழந்தையை கருத்தரிக்க மிகவும் துணிச்சலான செக்ஸ் நிலைகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு வீல்பேரோவை(ஒரு சக்கர வண்டி) தள்ளுவது போல், சக்கர வண்டி போவதைப் போல அந்தப் பெண் நிலை பெறுகிறாள், அதாவது கைகளை தரையில் அல்லது படுக்கையில் ஊன்றி இருக்கும் நிலையில் (பெண்  முழங்கைகளிலும் ஓய்வெடுக்கலாம்). ஆண்  பெண்ணின் கால்களைப் பற்றி பிடித்து, அவளது தொடகைளை சற்று அகற்றி,அவளது தொடைகளுக்கு இடையில் ஆண் தனது தொடைகளை வரிசைப்படுத்தி, பின்னால் இருந்து  ஆணுறுப்பை யோனியினுள் நுழைக்கும் முறை, இந் செக்ஸ் நிலை விந்தணுவை முட்டைக்கு நெருக்கமாக கொண்டு வரக்கூடிய ஆழமான ஊடுருவலை அனுமதிக்கிறது.

Side-by-side scissors செக்ஸ் நிலை

இந்த செக்ஸ் நிலையில், ஆண் பெண்ணுக்குள் நுழையும் நிலை, பெண்ணும் ஆணும் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் திசைளில் பக்கவாட்டில் படுத்தவாறு பெண்ணின் தொடையளுக்கிடையில் ஆணின்தொடையை இணைத்து ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் முறை. இந்த செக்ஸ் நிலையில் இருவரும் தங்களது இடுப்பை அசைத்து உச்சம் அடையலாம். இந்த நிலை விந்தணுவை விரைவாக கருப்பை வாயை அடைய உதவும், அத்துடன் ஆழமான நுழைவையும் கொடுக்கலாம்.

Rear entry செக்ஸ் நிலை

பெண் தனது தொடையை அகற்றி வயிற்றை படுக்கையுடன் இணைத்து  படுத்திருக்க, ஆண் அவள் பின்னாலிருந்து ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்கும் செக்ஸ் நிலை. இந்த செக்ஸ் நிலை ஆழமாக ஆணுறுப்பை மிஷனரி நிலையை விட யோனியில் நுழைக்க உதவும் என்று Journal of Sex & Marital Therapy study ஆய்வின் முடிவாகும். ஆய்வு கண்டுபிடிப்புகளை MRI மூலம் ஆவணப்படுத்துகிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தம் பல விதம்

கர்ப்பகால தவறுகள்!